சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களிடன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக 413 மையங்களில் நீட் தேர்விற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தனியார் பயிற்சி மையங்களை விட அரசு மையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த ஆண்டை விட நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 413 நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 2,583 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், பயிற்சி பெற்றால் எந்தத் தேர்விலும் வெற்றி பெற முடியும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, தமிழக பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையனுடன் இணைந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், இருமாநில கல்வி முறைகளை பற்றியும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் சர்மா, தங்கள் மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும், தமிழக பாடப்புத்தகங்களில் உள்ள QR CODE முறையை தங்கள் மாநிலத்திலும் கொண்டு வர பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது
. தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி; உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை விருப்ப மொழிகளாக வைத்துள்ளோம் என்றும் கூறினார்

No comments:
Post a Comment