நாடு முழுவதும், மெட்ரோ, ரயில், பஸ் என அனைத்து வித போக்குவரத்து கட்டணத்தை, ஒரே, 'டெபிட், கிரெடிட் கார்டு' மூலம் செலுத்தி, பயணிக்கும் தொழில்நுட்பத்தை தயாரிக்க, பெங்களூரு பி.இ.எல்., திட்டமிட்டு உள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனும், பி.இ.எல்., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கவுதம், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:பி.இ.எல்., தயாரித்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்; யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும், 'விவிபேட்' இயந்திரங்களை, லோக்சபா தேர்தலில், 400 தொகுதிகளுக்கு வழங்கினோம். இதன் மூலம், 2,600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
பி.இ.எல்., தயாரித்து வழங்கிய இயந்திரங்களில் முறைகேடு நடத்த வாய்ப்பே இல்லை; மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டவை.
இந்த இயந்திரங்கள் மீது, தேர்தலுக்கு முன் குற்றம் சாட்டியவர்கள், தற்போது அமைதியாகி விட்டனர்.
இருப்பினும், வேட்பாளர்களுக்கு சந்தேகம் இருந்தால், தேர்தல் முடிந்த, 45 நாட்களில், நீதிமன்றத்தில் முறையிடலாம்.தற்போதைய கால கட்டத்தில், ஜனநாயகம் நிலைக்க, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அவசியம். பி.இ.எல்., நிறுவனம், 2018 - 19ம் ஆண்டு, 11 ஆயிரத்து, 789 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது.
இது, கடந்தாண்டை விட, 17 சதவீதம் கூடுதலாகும். 2,703 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
டில்லி மெட்ரோ ரயில் நிலைய ஸ்மார்ட் கார்டை, பெங்களூரில் பயன்படுத்த முடியாது.
எனவே, நாடு முழுவதும் மெட்ரோ ரயில், சுங்கச்சாவடி கட்டணம், ரயில் கட்டணம், பஸ் கட்டணம் என அனைத்து வித போக்குவரத்துக்கும், ஒரே, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பெறும் தொழில்நுட்பத்தை, பி.இ.எல்., தயாரிக்கஉள்ளது.இந்த முறை, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலில் அமல்படுத்தப்படும்.
இதன் மூலம், ரொக்கமின்றி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, பயணிக்கலாம்.'இஸ்ரோ'வுடன் இணைந்து, செயற்கைக் கோள் தயாரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
கடற்படையில், 25 ஆயிரம் கோடி ரூபாய்; தரைப்படையில், 9,000 கோடி ரூபாய்; விமானப் படையில், 8,800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தாக்குதலில், பி.இ.எல்., உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை என்னவென்று பகிரங்கப்படுத்த இயலாது.
ஏற்றுமதியை அதிகரிக்க, வியட்நாம், மியான்மர், இலங்கை, ஓமன், சிங்கப்பூர், நியூயார்க்கில், பி.இ.எல்., அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment