தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரத்தை வெப்சைட்டில் வெளியிட அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, கீழவெளி வீதியை சேர்ந்த ஹக்கீம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்போல கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர்.
முறையான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழ்நாடு பள்ளிகள் சட்டத்திற்கு எதிராக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
எனவே, தனியார் பள்ளிகளுக்கான 2018-21ம் கல்வி ஆண்டு வரையிலான கல்விக்கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவில், தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக்குழுவினர், அனைத்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதனை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், மெட்ரிக்குலேசன் மற்றும் துவக்கப்பள்ளி இயக்குநர், தனியார் பள்ளிக்கல்வி கட்டண நிர்ணய குழுவின் சிறப்பு அதிகாரி ஆகியோர், கடந்தாண்டு ஏப்.30க்குள் வெப்சைட்டில் வெளியிட உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளின் கட்டண விபரத்தையும் வெப்சைட்டில் வெளியிட தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் ஒரு துணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனு மீதான விசாரணையை ஜூன் 21க்கு தள்ளி வைத்தனர்

No comments:
Post a Comment