வாட்ஸ்அப் செயலியில் இப்போ அந்த அம்சம் கிடைக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

வாட்ஸ்அப் செயலியில் இப்போ அந்த அம்சம் கிடைக்கிறது

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.


 தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும்.


இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது.


இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது.


 கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment