புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சிறப்பு விடுமுறை: அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு 10 நாள் சிறப்பு விடுமுறை: அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற 10 நாள் சிறப்பு விடுமுறை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் புற்றுநோய்க்கு  கீமோ தெரபி மற்றும் ேரடியோ தெரபி சிகிச்சை பெற ஊதியத்துடன் கூடிய 10 நாள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.  இந்நிலையில், இந்த விடுப்பு வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


அந்த அரசாணையின்படி, தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை பெற செல்லும் போது ஊதியத்துடன் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.


இதில் கீமோ தெரபி சிகிக்சை பெற 1 நாளும், ரேடியோ தெரபி சிகிச்சை பெற 1 நாளும், சிகிச்சையிலிருந்து மீண்டுவர 8 நாள் என்று மொத்தம் 10 நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.


இந்த விடுப்பு பெற சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் அல்லது பொறுப்பு அலுவலர் ஆகியோரிடமிருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment