89 இன்ஜி., கல்லுாரிகள் தரமில்லையா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

89 இன்ஜி., கல்லுாரிகள் தரமில்லையா?

இன்ஜினியரிங் கல்லுாரிகள், தரம் உள்ளவை, தரமில்லாதவை என, வேறுபடுத்தப்படவில்லை' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லூரிகளின் பெயர் மற்றும் மாணவர்களுக்கான இடங்கள் குறித்த பட்டியல், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், சில கல்லுாரிகளின் விபரங்களுக்கு கீழே, 'நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லுாரிகள்' என்ற, குறிப்பும் இடம் பெற்றுள்ளது


.அதாவது, இந்த கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட, சில வசதிகள் குறைவால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டமாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்பட்டன

அதையே, அண்ணா பல்கலை குறிப்பிட்டிருந்தது.


 இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ளவற்றில், 89 கல்லுாரிகள் தரமில்லாதவை என்ற பெயரில், சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது. இதுகுறித்து, அண்ணா பல்கலை பதிவாளர், கருணாமூர்த்தி, நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு


:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை என்றும், அவற்றின் பெயர், அந்த கல்லுாரிகளின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறியீட்டு எண் போன்றவற்றையும், அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளதாக, சமூக வலை தளங்களில் பரப்பப்படுகிறது


ஆனால், அண்ணா பல்கலை, தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லுாரிகளை, தரமான கல்லுாரிகள் மற்றும் தரமற்ற கல்லூரிகள் என, வேறுபடுத்தவில்லை.

 மேலும், 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்தும், எந்த தகவலையும் வெளியிடவில்லை.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment