சித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பு விண்ணப்பம்: அடுத்த வாரம் விநியோகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

சித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பு விண்ணப்பம்: அடுத்த வாரம் விநியோகம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஒரு வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


அரசு மற்றும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

 குறிப்பாக, அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 358 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.


அதற்கான விண்ணப்ப விநியோகம், திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்கியது.
முதல் நாளில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:


 இந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில், நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட உள்ளன என்று தெரிவித்தனர்

No comments:

Post a Comment