காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
1⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣

*இன்றைய திருக்குறள்*

*புறங்கூறாமை*
குறள் எண்: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
 நட்பாடல் தேற்றா தவர்.

*மு.வ உரை*:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

*கருணாநிதி  உரை*:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

*சாலமன் பாப்பையா உரை*:
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

*பொன்மொழி*

 காரியம் நிறைவேறும் வரை அவற்றைப் பற்றி அறிவாளி வெளியே சொல்ல மாட்டான்.
  - சாணக்யா

*பழமொழி அறிவோம்*

Bend the tree while it is young

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா ?

*Important  Used Words*

 Trachea மூச்சுக்குழாய்

 Bone எலும்பு

 Palm உள்ளங்கை

 Collar Bone கழுத்து எலும்பு

 Heart இதயம்

*பொது அறிவு*

1.தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

*நீராடும் கடலுடுத்த*

2. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

*பரத நாட்டியம்*

3.தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

*மரகதப்புறா*

4.தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

*பனைமரம்*

5.தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

*செங்காந்தள் மலா்*

6. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

*கபடி*

*Today's grammar*

*Articles Usage*

Indefinite Article – ‘An’

‘An’ is used:

Before a noun which begins with a vowel.

Example:

an apple

Before a word which begins with a vowel sound or a silent ‘h’.

Example:

an hour, an honest man, an heir, an honour, an honourable man, etc

Before a singular, countable noun which begins with a vowel or silent ‘h’

Example:
an orange

*அறிவோம் தமிழ்*

*வல்லினம் மிகும் இடங்கள்*

1.அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

2.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.

3.ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்பின் வல்லினம் மிகும்.

4.சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

5.இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம், வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகளின் பின் வல்லினம் மிகும்.

( மற்றவை நாளை)

*இன்றைய கதை*

*காக்கா ஏன் கறுப்பாச்சு?*
( கட்டுக் கதை)

 ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.

 சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா.

 அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம் ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

 சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிற காக்காவை கூப்பிட்டு பையில சந்தனம் வாசனை திரவியங்கள் முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம்.

 காக்கா அந்த பைய தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள் உணவுப்பொருட்கள் எடுத்துக்கிட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசைப்பட்டு பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம்.

 மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

 காக்கா நல்லா சாப்பிட்டு வந்து பைய எடுத்துக்கிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம்.

 மறுநாள் காலை சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததைப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம்.

நீதி :
கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்

இன்றைய செய்திகள்


🔵பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

🔮சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔮2025ம் ஆண்டுக்கு பிறகு மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை.

🔮 தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

🔮ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தரைவழி, வான்வழி தாக்குதல்; 20 தலீபான்கள் பலி.

🔵உலக கோப்பைக் கிரிக்கெட்:  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திலேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

*தொகுப்பு*
T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
தமிழ்நாடு டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.

No comments:

Post a Comment