மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததற்கு டெண்டரில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததற்கு டெண்டரில் ஏற்பட்ட குளறுபடியே காரணம்

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா ராயபுரத்தில்  நடந்தது.

சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 3,491 பேருக்கு மடிகணினி வழங்கப்பட்டது.

இவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கல்வி நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர்

. இதில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர்கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறு. 2 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

 வேண்டும் என்றால் மாணவர்களின் பட்டியலை தருகிறேன். இதுவரை 54 லட்சத்து 32 ஆயிரம் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விடுபட்டவர்களுக்கு வழங்குவதற்காக 15 லட்சம் மடிக்கணினிகள் தயார்நிலையில் உள்ளன.

 கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததற்கு டெண்டரில் ஏற்பட்ட குளறுபடியே காரணம்.

 தற்போது புது பாடத்திட்டம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி முன்னதாகவே வழங்கி வருகிறோம்.6 முதல் 8ம் வகுப்பு வரை மிக விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்

. மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து படிப்பதற்கு ஏதுவாக இன்டர்நெட் வசதி செய்துதரப்படும்.

அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சிஏ முடித்த மாணவர்கள் குறைவாக உள்ளனர்.

இதனால் சிஏ பயிற்சி மையம் தொடங்கப்படும். புதிய கல்வி கொள்கையில் அரசுக்கு ஒரே நிலைப்பாடுதான்.

இருமொழி கொள்கை முடிவு குறித்து கடிதம் மூலம் பிரதமருக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment