பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ‘கட்ஆப்’ மதிப்பெண்கள் குறைத்தது ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ‘கட்ஆப்’ மதிப்பெண்கள் குறைத்தது ஏன்?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:


 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்வில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மிகக் குறைந்த அளவில் கட் ஆப் மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து வங்கி நிர்வாகமும், மத்திய அரசும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.


 தாழ்த்தப்பட்டோருக்கு 61.25, பழங்குடியினருக்கு 53.75, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 61.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ள கட் ஆப் மதிப்பெண்கள், 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 28.5 ஆனது எப்படி? சமூக நீதியின் அடித்தளத்தையே சிதைக்கும் இந்த தவறு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment