வேளாண் பல்கலை.யில் பட்டதாரிகளுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 26, 2019

வேளாண் பல்கலை.யில் பட்டதாரிகளுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.புதுதில்லியில் உள்ள புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் பல்கலைக்கழக வேளாண்மை பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறையில், சாண எரிவாயு மேம்பாடு, பயிற்சி மையத்தின் கீழ் சுழற்சாவி முகவர்கள் (டர்ன் கீ ஒர்க்கர்), சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகிய இரண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன


.
நாளொன்றுக்கு ரூ.300 வீதம் ஊக்கத் தொகையும், ரூ.700-க்கு மிகாமல் பயணப்படியும் வழங்கப்படும்சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சியில், விவசாயிகள், பெண் தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் காலத்தில் நாளொன்றுக்கு ரூ.250 வீதம் சலுகைப்படி வழங்கப்படும்.
வரும் செப்டம்பர் மாதம் பயிற்சிகள் நடைபெற உள்ளன.


தகுதியான நபர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களது விவரங்களை அனுப்ப வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611276 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக 5 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 19 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்டம் பெற்ற இளைஞர்கள், இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611310 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment