தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்.
பழநி கோயிலில் கருவறை, உட்பிரகாரங்களில் பாதுகாப்பு மற்றும் தொன்மை காரணங்களுக்காக படம் பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் சிலர் திருட்டுத்தனமாக மூலவரை படம் பிடித்து விடுகின்றனர்.
இதனை செக்யூரிட்டிகள், அதிகாரிகள் கவனிக்கும்போது செல்போன், கேமராக்களை கைப்பற்றி, அதிலுள்ள படங்கள் அழிக்கப்பட்டு பக்தர்களிடம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் மூலவரை படம் பிடித்து வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவவிட்டு விட்டார். இதனால் செல்போன் பயன்படுத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழநி கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பழநி கோயிலில் நடைபெறும் ஆறு கால பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
கொண்டு வந்தால் கோயில் ஊழியர்களிடம் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். பின், தரிசனம் முடித்து கிளம்பும்போது டோக்கனை கொடுத்து திரும்ப பெற்று கொள்ளலாம்.
இனி கோயிலில் தடை செய்யப்பட்ட இடங்களில் செல்போன் மூலம் படம் எடுத்தால், பறிமுதல் செய்வதுடன் பக்தர்களுக்கு திரும்ப வழங்கப்பட மாட்டாது. கோயில் உண்டியலில் போடப்படும்’’ என்றனர்.

No comments:
Post a Comment