பழங்குடியின மாணவனுக்கு சீட் இல்லை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

பழங்குடியின மாணவனுக்கு சீட் இல்லை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைக்குட்பட்ட சுண்போடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். பழங்குடியின மாணவரான இவர், கடந்தாண்டு பிளஸ்2 தேர்வில் வேளாண் செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் 444 மதிப்பெண் பெற்றார்.

இந்தநிலையில், இந்தாண்டிற்கான தொழிற் பாடப்பிரிவில் சேர, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைகழகங்களில் விண்ணப்பித்திருந்தார். அதில் தரவரிசை பட்டியலில் 409வது இடம் பிடித்தார்.  இதேபோல், கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 146வது இடம் பிடித்தார்.


  முதலிடம் பிடித்தும், இடம் கிடைக்காததால் மனமுடைந்த சந்திரன் கலெக்டரிடம் மனு கொடுத்தார், மனுவில் தரவரிசை பட்டியலில் முதல் இடம் இருப்பதால், பல்கலை கழகங்களில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வேறு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கவில்லை, மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்து தினகரன் நாளிதழில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன், தாமாக முன்வந்து விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தார்.


பின்னர் நீதிபதி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment