வாகன ஓட்டிகளே..! இன்று நள்ளிரவு முதல் புது திட்டம் அமல்..! உஷார். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

வாகன ஓட்டிகளே..! இன்று நள்ளிரவு முதல் புது திட்டம் அமல்..! உஷார்.

வாகன ஓட்டிகளே..! இன்று நள்ளிரவு முதல் புது திட்டம் அமல்..! உஷார்..!

இன்று நள்ளிரவு முதல் விமான நிலையங்களில் வாகனங்களுக்கு புதிய கட்டண முறையை அமல் படுத்தப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் இறக்கிவிடவும் வரும் வாகனங்களுக்கு 10 நிமிடங்கள் இலவச நேரமாக அமலில் இருந்து வந்தது. 10 நிமிடங்களுக்கு மேலே சென்றால் அவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது

அதன்படி பயணிகளை ஏற்றவும்.. இறக்கவும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த 10 நிமிடம் ரத்து செய்யப்பட்டு உள்ளது

இனிமேல் விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் இறக்கிவிடவும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ஆனால் வாகனத்தை விமான நிலையத்தில் நிறுத்தி வைத்தால் வாகன கட்டத்திலிருந்து கட்டணத்திலிருந்து 4 மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அதன் படி பார்த்தால் அரை மணி நேரத்திற்கு ரூ.40 வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது வாகன நிறுத்துமிடத்தில் 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment