புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 18, 2019

புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் துவங்கியது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பத்தாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி முகாம், பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.கல்வி மாவட்ட அலுவலர் (பொ) வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார்.


பள்ளி துணை ஆய்வர் ஜெயச்சந்திரன், கோமங்கலம் பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.


பயிற்சி முகாமில் முதல் இரண்டு நாட்கள், கணித பாடத்துக்கும், அதன்பின், அறிவியல் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும், 22 மற்றும், 23ம் தேதிகளில், சமூக அறிவியல் பாடத்துக்கும்; 24 மற்றும், 25ம் தேதி, ஆங்கிலம் பாடத்துக்கும், 26 மற்றும், 27ம் தேதி தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற கருத்தாளர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பயிற்சி முகாமில், புதிய பாடத்திட்டத்தின் நோக்கம், பாடத் திட்டத்தில் உள்ள பகுதிகள், புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள், புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு புதிய பாட நுால்களில் கற்பிக்கும் முறைகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.


பயிற்சி முகாம் இரண்டு கட்டமாக வரும் ஆக., 14ம் தேதி வரை நடக்கிறது,' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment