வீணாகும் பொருட்களையும் விலைபொருட்களாக மாற்றலாம்: அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் முயற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

வீணாகும் பொருட்களையும் விலைபொருட்களாக மாற்றலாம்: அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் முயற்சி

புதுச்சேரி சேலியமேடு பகுதியில் கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.


இந்த பள்ளியில் உமாபதி என்பவர் நுண்கலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் இந்த முயற்சிக்கு ஆரம்பப்புள்ளியாக திகழ்கிறார்.

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்ததுக்கொள்' என்ற பழமொழிக்கு ஏற்ப தன் துறை மாணவர்களுக்கு கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்ட அவர், அதை இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்ய வேண்டும் என்றும் நினைத்தார்.


 அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி எளிமையானது தான் என்றாலும், ஆனால் இன்று அதனால் கிடைக்கும் பலனோ அதிகம் என்பதால் அவரால் அதிக மகிழ்ச்சி அடையமுடிகிறது


யாரும் பயன்படுத்த முடியாத பொருட்களாக இருக்கும் பனை மட்டை, தென்னை மட்டை, தென்னங்கீற்று உள்ளிட்ட பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை செய்ய முடியும் என மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு பொருட்களை உருவாக்க தொடங்கினர்.


 உதாரணமாக சாமி சிலைகள், போர் வீரர்கள், அழகான பொம்மைகள் என பல்வேறு விதமான உருவங்களை உருவாக்க தொடங்கினர்.


வீணாகும் பொருட்களில் இருந்து இப்படி ஒரு பொருளை உருவாக்க முடியுமா? என மாணவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அழகிய பொருட்கள் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது


. தங்கள் கற்பனை சிறகுகளை விரிக்கத் தொடங்கிய மாணவர்கள் விதவிதமான பொருட்களை செய்து அசத்தினர்.


பின்பு இந்த பள்ளி மாணவர்களிடம், தனியார் பள்ளி மாணவர்கள் பலரும் இது போன்ற பொருட்களை செய்து தருமாறு கூறியுள்ளனர்.


 அழிந்த உருவங்களை கொண்டு புதிய உருவங்கள் உயிர் பெறுவதால் ' அழிவின் உயிர்ப்பு ' என்ற தலைப்பிலேயே பொருட்களை உருவாக்கி வருகின்றனர். மாணவர்களின் இந்தனைய உருவாக்கத்தை தெரிந்துகொண்ட மக்கள் இதனை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

No comments:

Post a Comment