புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து ஒரு கோடி கையெழுத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 25, 2019

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து ஒரு கோடி கையெழுத்து

புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று தொடங்கியது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 1 கோடி கையெழுத்து பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இதன் தொடக்க நிகழ்ச்சி குமரி மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் தொடங்கியது. நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்தோணி தலைமை வகித்தார்.

 கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற சிஐடியு மாநில செயலாளர் ஆறுமுகநயினார் நிருபர்களிடம் கூறியதாவது:


புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று முதல் ஒரு கோடி கையெழுத்து பெறுதல் நடைபெற்று வருகிறது.

புதிய கல்வி கொள்கையின் வாயிலாக 3, 5, 8 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற செயலாகும். இதனால் கிராமப்புற சாதாரண எழை மக்கள் படிப்பதற்கு வசதி மறுக்கப்படும்.

கல்வி கொள்கை நடைமுறைக்கு வந்தபிறகு எதிர்ப்பதை விட இப்போதே எதிர்க்கவே ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது என்றார்

No comments:

Post a Comment