ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம் : 20 முக்கியமான கேள்விகள் பட்டியல் என்னென்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 23, 2019

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரம் பரபரப்பு வாக்குமூலம் : 20 முக்கியமான கேள்விகள் பட்டியல் என்னென்ன?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரத்திடம் 20 முக்கியமான கேள்விகளை கேட்டு, சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் முறைகேடு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், சிபிஐ எதிர்பார்த்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை (73) வரும் 26ம் தேதி வரையில் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுவாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.


 வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 முக்கிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறதுஒவ்வொரு கேள்விகளுக்கும் துணை கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில் சில முக்கியக் கேள்விகளின் விபரம் வருமாறு:

1. வெளிநாடுகளில் நீங்கள் சொத்துகள் வாங்குவதற்கான அடிப்படை வருவாய் என்ன?


2.  இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது?

3. பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது, அது எங்கிருந்து வந்த பணம்?

4. உங்கள் மகன் கார்த்தி, ஏன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து பணம் பெற்றார்?

5. உங்களது மற்றும் உங்களது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த போலி நிறுவனங்கள் விவரம் என்ன?

6. வெளிநாடு சார்ந்த போலி நிறுவனத்தின் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதுகுறித்த தங்களது கருத்து என்ன?

7. ஐஎன்எக்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தை எங்கு முதலீடு செய்தீர்கள்?

8. மத்திய நிதியமைச்சராக இருந்து கொண்டு விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்?

9. டெல்லி நார்த் பிளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்?

10. ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு உதவிய வகையில் செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனங்கள் வழியாக கார்த்திக்கு பணம் அனுப்பியது உண்மையா?

11. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?

12. ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் இந்திராணி முகர்ஜியுடன் உங்களை சந்திக்க வந்தாரா? அல்லது இந்திராணி முகர்ஜியிடம் இருந்து பணத்தை பெறுவதில் பத்திரிகையாளர் யாராவது உதவினார்களா?

13. உங்கள் மகன் கார்த்தியின் கட்டுப்பாட்டில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது?

14. நீங்கள் நிதியமைச்சராக இருந்த போது, உங்களது செல்வாக்கை பயன்படுத்தி எப்ஐபிபி மூலம் பலதுறைகளிலும் உங்கள் மகன் ஈடுபட்டது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

15. இந்திராணி கணவர் பீட்டர் முகர்ஜியை நீங்கள் சந்தித்தீர்களா?

16. ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அனுமதி கொடுத்த வகையில், எந்தெந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது?

17. இந்திராணியை தொடர்பு கொள்ளுமாறு மகன் கார்த்தியிடம் கூறியது உண்மையா?

18. கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த பின் எங்கே இருந்தீர்கள்?

19. தலைமறைவாக இருந்த போது யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?

20. உங்களது செல்போன் எதற்காக சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது?

21. உச்சநீதிமன்றத்தில் இருந்து சென்றபோது, பாதி வழியில் நீங்கள் இறங்கியதாக உங்களது கார் ஓட்டுநர் மற்றும் கிளர்க் சொல்கின்றனரே? நீங்கள் எங்கு சென்றீர்? கைதில் இருந்து தப்பிக்க வெளியில் சென்றீர்களா?

22. சிபிஐ நோட்டீஸ் அனுப்பிய பின், ஏன் சிபிஐ முன் ஆஜராகவில்லை? என்பன ேபான்ற கேள்விகள் துருவி துருவி சுற்று வாரியாக கேட்கப்பட்டன.

 Source Dinakaran website

No comments:

Post a Comment