பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு

அக மதிப்பீட்டு மதிப்பெண் விதிகளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.


அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடங்களுக்கான கருத்தியல் தேர்வுடன், அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படுகிறது.


 மாணவர்களின் வருகை பதிவு, கள பயணம், செயல் திட்டம், அக மதிப்பீட்டு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனஇதற்காக, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

 குறிப்பாக, ஒவ்வொரு மாணவருக்கும், வருகைப்பதிவு, 75 - 80 சதவீதம் இருந்தால், 1 மதிப்பெண்; 80 சதவீதத்துக்கு மேல் இருந்தால், 2 மதிப்பெண் வழங்கப்படும்.அதேபோல, ஆய்வக பதிவேடு பராமரிப்புக்கு தனியாக மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த விதிகளை முன் கூட்டியே மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment