4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனங்களில் பயணித்தால் ஹெல்மெட் கட்டாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 13, 2019

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனங்களில் பயணித்தால் ஹெல்மெட் கட்டாயம்

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா விரைவில் அமலுக்கு வர உள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் போக்குவரத்து விதிகளை பலமடங்கு அதிகரித்திருக்கிறது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


ஹெல்மெட் அணியாமல் செல்பவருக்கு ரூ.100-தான் இதுவரை அபராதம் இருந்தது, பலபேர் அதை ஒரு பொருட்டாவே கருதாமல் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.


இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டினாலோ அல்லது உடன் அமர்த்திருந்தாலோ ரூ.1000 அபராதம் என்று மோட்டார் வாகன சட்டத்திருத்தம் தெரிவிக்கின்றது.

இந்த மோட்டார் வாகன சட்டம் விரைவில் சென்னை போக்குவரத்து நிலையங்களில் அமல்படுத்த படும் என்று கூறினர். சாலையில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்போர் பெரும்பாலும் இளைஞர்களே என்றும், அதில் 90% சதவிதம் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் உயிரிழக்கின்றனர்.


சிலர் ஹெல்மெட் அணிந்தும் சரியான லாக் செய்யாததால் விபத்தின்போது கழண்டுவிடுகிறது, இதனால் அவர்கள் விபத்தில் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.  மேலும் வாட்ஸஅப்ப் பரவி வரும் செய்தியாக குழந்தைகளை பள்ளிகளில் விடப்போகும்போது அங்கு விலக்கு அளித்ததாக தவறான வதந்தி வந்ததாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.


எந்த வேலைக்காக சென்றாலும் அலுவலக வேலையோ பள்ளியில் குழந்தைகளை விடும்போதோ ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் இல்லை என்றால் விதிக்கப்பட்ட அபராதம் செலுத்தவேண்டும்.


மேலும் தலைக்கவசம் மட்டும் இல்லாமல் எந்த போக்குவரத்து விதியை மீறினாலும் அதிகமாக அபராதம் விதிக்கப்படும் என்று கூறிகின்றனர்.


முதன்மையாக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் , இல்லை என்றால் மேற்கண்ட அபராதத்தை கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா 2019ல், இருசக்கரவாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகளும் இணைக்கப்பட்டன.

அதில், குழந்தைகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டப்பிரிவு 129ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இருசக்கரவாகனங்களை ஓட்டிச் செல்லும், பயணிக்கும் அல்லது அழைத்து செல்லப்படும் 4வயது மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளும் மோட்டார் வாகனங்களில் பயணிக்க வேண்டுமானால் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment