பெண் குழந்தைகள் தின மாநில விருது: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

பெண் குழந்தைகள் தின மாநில விருது: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது பெற, 18 வயதுக்கு உட்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.


தமிழக அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத்துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும், 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக மாநில விருது வழங்கப் படுகிறது.


அதன்படி, ஆண்டு தோறும் சிறப்பாக சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினமான, ஜன., 24ல், பாராட்டு பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான மாநில விருது பெற, தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


.நிபந்தனையுடன் கூடிய விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும், நவ., 16ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment