மூடப்பட்ட அரசு பள்ளியை போராடி திறந்த கிராம மக்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

மூடப்பட்ட அரசு பள்ளியை போராடி திறந்த கிராம மக்கள்

தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சேர்த்து, மூடப்பட்ட அரசுப் பள்ளியை, கிராம மக்கள் ஒன்றிணைந்து, மீண்டும் திறந்தனர்.தமிழகத்தில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள, அரசு பள்ளிகளை மூட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


மேலும், மூடப்படும் பள்ளிகளில், பொது நுாலகம் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில், 46 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, நுாலகமாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குளத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோயில் அருகே சின்னபட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, நுாலகம் திறக்கப்படுவதாக, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், குளத்துார் தொடக்கப்பள்ளி, 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.1952ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இப்பள்ளியை, எதிர்கால சந்ததியினருக்காக மீண்டும் திறக்க, அக்கிராம மக்கள் முயற்சித்தனர்.


இதற்காக, நேற்று முன்தினம், அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில், கிராம கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, உடனடியாக, 10 மாணவர்களை சேர்க்க திட்டமிட்டனர்.



அதன்படி, கிராம மக்களின் தீர்மானத்தை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, பள்ளியை, நுாலகமாக மாற்றியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், நேற்று, தர்ணா நடத்தினர்.


அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர், திராவிடசெல்வம், வட்டார கல்வி அலுவலர், முத்துகுமார் ஆகியோர், கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர்.மேலும், அப்பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று, 1 முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும், 11 மாணவர்களை, அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.


அதன்பின், கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளியை, நேற்று, 11:30 மணிக்கு திறந்தனர்.வழக்கம் போல, ஒரு தலைமை ஆசிரியருடன் வகுப்புகள் மீண்டும் துவங்கியது. மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க போராடிய கிராம மக்களுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment