கேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

கேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்

கேட் என்னும் பட்டதாரி நுண்ணறி தேர்வில், 2020-ஆம் ஆண்டு முதல் உயிரி மருத்துவப் பொறியியல் பாடமும் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகையுடன் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சில நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்கள் தேர்வையும் நடத்துகின்றன.

இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் தகுதித் தேர்வில் புதிய பாடப் பிரிவைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவில் ஆராய்ச்சிக் கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களிடையே போதுமான அளவுக்கு ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் உயிரி மருத்துவத் தொழில்நுட்பத் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியாத நிலை நிலவி வருகிறது.


இதனால், வரும் காலங்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கிடையே இளநிலை உயிரி மருத்துவப் பொறியியல் பாடத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் கேட் தேர்வில் இந்தப் பாடத்தையும் சேர்ப்பது என சென்னை ஐஐடி கல்விக் குழு இயக்குநர் வி.ஜெகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆகவே, வரும் 2020-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் கேட் தேர்வில் இந்தப் பாடமும் இடம்பெறும். இதற்கான பாடத்திட்டத்தை http://gate.iitd.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment