ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 13, 2019

ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி

சென்னை துறைமுகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த வாரம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.


இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் வட சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்குமே சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பணத்துக்கு   வருமான சான்றிதழ் வழங்க வேண்டும்.


இந்த சூழ்நிலையில் சர்வர் வேலை செய்யாததால் கடைசி நாளான நேற்று பல ஏழை மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.


மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கால அவகாசம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment