எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.



கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்களில் எவரேனும் கல்லூரிகளில் சேராமல் இருக்கும் பட்சத்தில், அந்த இடங்களுக்கு மட்டும் அடுத்த வாரத்தில் சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது.



இந்த நிலையில், அதில் காலியாக இருந்த இடங்களுக்கும், கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு கல்லூரியில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது


அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) வரை மூன்று நாள்களுக்கு அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது.



மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 146 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.



அதைத் தவிர, சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ, ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.


அதேபோன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கும் 16 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டன.
மூன்று நாள்கள் நடந்த கலந்தாய்வின் நிறைவில் 261 எம்பிபிஎஸ் இடங்களும், 16 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின

No comments:

Post a Comment