போலி சட்டகல்லூரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

போலி சட்டகல்லூரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை

போலி சட்டகல்லூரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்களுடன் அதன் தலைவர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதியதாக சட்ட பயிற்சியகம் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீட்டு தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை மறுஆய்வு செய்வது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் குழு ஆலோசிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்டை மாநிலங்களைப் போல இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வரை உதவி தொகை வழங்க கோரி முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக பார் கவுன்சில் தலைவர் அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நிர்வாக வசதிக்காக ஏழு பேர் பார்கவுன்சில் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் மீதான புகார்களை விசாரிக்க ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment