சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் எது என்று தெரியுமா? தமிழகத்திற்கு கிடைத்த பெருமை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் எது என்று தெரியுமா? தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் என்ற பெருமையை பெறுகிறது பழனி பஞ்சாமிர்தம்.

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் இதுவாகும்.

மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து அந்த வரிசையில் 29-வதாக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம்.

புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனிருசி உடையது. நாட்டு சர்க்கரை, மலை வாழைப்பழம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய 5 இயற்கையான பொருட்களின் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இவற்றுடன் கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவையும் சேர்த்து கூடுதல் ருசியாக செய்யபடுகிறது..


தனித்துவம் வாய்ந்த பழனி பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகிறது.

திரவ நிலையில் இருக்கும் பஞ்சாமிர்தத்தில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை என்று சொன்னால் நம்ப முடியுமா அனால் அதுவே உண்மை.


ஏனெனில் சுத்தமான பஞ்சாமிர்தம் ஒரு சொட்டு தண்ணீர் கலந்தால்கூட கெட்டு போய்விட கூடிய தன்மை கொண்டது.

கெட்டு போகாமல் பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் செயற்கைப் பொருளையும் இதில் கலக்க படுவதில்லை.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் கொடுக்க படித்தது.

இதனை ஏற்று கொண்ட அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment