குழந்தைகளின் பிரச்னைகளுக்கு செல்போன் தான் காரணம்: யூனிசெப் அதிகாரி தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

குழந்தைகளின் பிரச்னைகளுக்கு செல்போன் தான் காரணம்: யூனிசெப் அதிகாரி தகவல்

குழந்தைகள் அதிக அளவு செல்போன் பயன்படுத்துவதால் மனரீதியான பிரச்சனை ஏற்படுகிறது என்று யூனிசெப் அதிகாரி அஜீத் தெரிவித்தார்.


 மனித கடத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு கொத்தடிமைகள்,  குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித கடத்தலை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து  ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கான பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது.


இதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இதனை யூனிசெப்  அமைப்பின் நிர்வாகி அஜீத் கூறுகையில், இந்தியாவில் 43 சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துவதால் அவர்களுக்கு மனரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் தங்களுடைய நேரத்தை செலவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் என்றார். 

No comments:

Post a Comment