அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட பஸ் வசதியினை தொடங்கி வைத்த மாவட்ட கல்வி அலுவலர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 14, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட பஸ் வசதியினை தொடங்கி வைத்த மாவட்ட கல்வி அலுவலர்

ஆம்பூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் லதா தொடங்கி வைத்தார்.


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது.


இப்பள்ளியில் ஈச்சம்பட்டு, மூப்பர் காலனி, சின்னப்பள்ளி குப்பம், இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் உரிய பஸ் வசதியின்றி அவதிப்பட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த கிராம மக்கள் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர்.


பின்னர், பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் ஆசிரியர்கள் இணைந்து, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக ரூ. 6லட்சம் மதிப்பிலான ஒரு பஸ்சை வாங்கினர்.


இந்த பஸ்சை மாவட்ட கல்வி அலுவலர் (வாணியம்பாடி) லதா நேற்று மாலை கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment