சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு

சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதம்:அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், 15ம் தேதி, சுதந்திர தின விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும்


.பள்ளி, ஒன்றிய அளவில், மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில், பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும்சுதந்திர தினத்தன்று, அனைத்து பள்ளிகளிலும், மரக்கன்று நட வேண்டும். 


இதற்கான இடங்களை தேர்வு செய்து, முறையாகப் பராமரிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வனத் துறை அதிகாரிகளிடம், மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.பள்ளி வளாகம் வண்ணக் காகிதம், மலர்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், காலை, 9:30 மணிக்கு, தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment