ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் இனி கட்டணம் குறித்து பயப்படவே வேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் இனி கட்டணம் குறித்து பயப்படவே வேண்டாம்

ஏடிஎம் -ல் பணம் எடுப்பவர்களுக்கு இதை விட ஒரு குட் நியுஸ் ஆர்பிஐ- யால் சொல்ல முடியாது.


நம்ம பணத்தை நாம எடுக்கவே பயப்படுவோம். காரணம் 3 முறைக்கு மேல போனா கட்டணம் விழும் என்ற பயம். அதுமட்டுமில்லாமல் அந்த வங்கியோட ஏடிஎம்மில் எடுத்தால் கட்டணம் வராதுனு தேடி தேடி அலைவோம்.

இது ஒரு பிரச்சனை என்றால் அடுத்த பிரச்சனை, பணம் எடுக்காமலே டெக்னிக்கல் ப்ராபல்ம்களுக்கு கூட வங்கி நிர்வாகம் கட்டணம் கட்ட வைத்து விடும். ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வெளியே வராமல் ஃபைலர் ஆனால் கூட நமக்கு சார்சஸ் உண்டு. இந்த மிகப் பெரிய அவதியில் இருந்து நம்மை நிம்மதி மூச்சு விட வைத்துள்ளது ஆர்பிஐ.


இனிமேல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண தொகையை விதிக்க கூடாது என்றும், தொழில்நுட்ப கோளாறுகளால் ரத்தாகும் சேவைகளுக்கும் கட்டணம் விதிக்க கூடாது என வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இதுக்குறித்த அறிக்கை ஆர்பிஐ வங்கிகளுக்கு நேற்று மாலை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.


இதன் பின்பு இதுக் குறித்து வங்கி நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து யோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment