GROUP- 4' EXAM:TNPSC NEW INSTRUCTIONS - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 23, 2019

GROUP- 4' EXAM:TNPSC NEW INSTRUCTIONS

அரசு பணியில், 6,491 காலியிடங்களை நிரப்ப, செப்., 1ல், 'குரூப் - 4' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 16.30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இடைத் தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


அரசு துறைகளில் காலியாக உள்ள, 6,491 பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4 தேர்வு வழியாக நிரப்பப்பட உள்ளன.


இதற்கு, 16.30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தேர்வுக்கான ஹால் டிக்கெட், www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 301 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், செப்., 1ல் தேர்வு நடைபெற உள்ளது

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தேர்வு கட்டணத்தின் ரசீது நகலுடன், விண்ணப்பதாரர் விபரங்களை, contacttnpscgmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, 28க்குள் அனுப்ப வேண்டும்.பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய, வங்கி, தபால் அலுவலகம், பரிவர்த்தனை குறியீட்டு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்!
'டி.என்.பி.எஸ்.சி.,யின் நியமனங்கள் அனைத்தும், தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.


 பொய்யான வாக்குறுதி கூறி, தவறான குறுக்கு வழியில், வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத்தரகர்களிடம், கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களால் ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும், தேர்வாணையம் பொறுப்பாகாது' என, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.


பணியிடங்கள் விபரம்!
வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அதிகாரி, 397; பிணையமற்ற இளநிலை உதவியாளர், 2,688; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர், 104; வரி வசூலிப்பவர் - முதல் நிலை, 34 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன.


நில அளவையாளர், 509; வரைவாளர், 74; தட்டச்சர், 1,901; சுருக்கெழுத்து தட்டச்சர், 784 காலியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரத்து, 600 ரூபாய் முதல், 65 ஆயிரத்து, 500 வரை சம்பளம் வழங்கப்படும்.

மற்ற பதவிகளுக்கு, குறைந்தபட்சம், 19 ஆயிரத்து, 500 முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment