P.F PENSION :புதிய வசதி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

P.F PENSION :புதிய வசதி அறிமுகம்

, பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தின் குறிப்பிட்ட தொகையை மொத்தமாக பெற்றுக் கொள்ளும் வசதி மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது


.வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியம் மொத்தமாக கணக்கிடப்பட்டு அதில் மூன்றில் இரண்டு பங்கை பணி ஓய்வு பெறும்போதே மொத்தமாக பெற்றுக் கொள்ளும் வசதி 2009ல் நீக்கப்பட்டது.


இந்நிலையில் 'கம்யூடேஷன்' எனப்படும் ஓய்வூதியத் தொகையில் குறிப்பிட்ட ஒரு பங்கை மொத்தமாக பெறும் வசதியை மீண்டும் அறிமுகம் செய்ய வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் மத்திய வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பி.எப். ஓய்வூதியம் பெறும் 6.3 லட்சம் பேர் பயன் பெறுவர்.


 இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஓய்வு பெறும்போது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவருக்கு கிடைக்க உள்ள மொத்த ஓய்வூதியம் கணக்கிடப்படும்.


அதில் மூன்றில் இரண்டு பங்கைமொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள ஒரு பங்கு மட்டும் ஓய்வூதியமாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியம் கிடைக்கும்.


இதுபோன்ற வசதி அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே உள்ளது. பி.எப். ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த வசதியை தொடர வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது

No comments:

Post a Comment