ஆணிப்படுக்கையில் 100 யோகாசனம் :திண்டுக்கல் மாணவர் உலக சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 13, 2019

ஆணிப்படுக்கையில் 100 யோகாசனம் :திண்டுக்கல் மாணவர் உலக சாதனை

ஆணிப்படுக்கையில் 32 நிமிடங்களில் 100 யோகாசனங்கள் செய்து திண்டுக்கல் மாணவர் உலக சாதனை நிகழ்த்தினார்.


திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக்குமார். ஜிடிஎன் கல்லூரியில் பிஎஸ்சி உடற்கல்வி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வரும் இவர் உலக சாதனை படைக்க எண்ணினார்.


ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர் 1,500 ஆணி படுக்கையில், 25 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்திருப்பதுதான் சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் நிகழ்ச்சி ஜிடிஎன் கல்லூரியில் நடந்தது.

 நடுவர்களாக குளோபல் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்த், ஜெயபிரதாப் இருந்தனர். இதில், தீபக்குமார் 1,500 ஆணி படுக்கையில் 15 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்து பழைய சாதனையை முறியடித்தார்.


மேலும் 32 நிமிடம் 40 விநாடிகளில் 100 யோகாசனங்களை செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதையடுத்து தீபக்குமாருக்கு குளோபல் நோபல் உலக சாதனை விருதை அந்நிறுவனத்தை சேர்ந்த டெல்லா ரவீன் வழங்கினார்.

  நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை, முதல்வர் பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீபக்குமார் இன்று 24 மணிநேரம் ஆணி படுக்கையில் பத்மாசனம் செய்து புதிய சாதனை படைக்கவுள்ளார். 

No comments:

Post a Comment