தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 14, 2019

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆங்காங்கே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


சென்னையில் வானம் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment