துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 11, 2019

துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, துணைவேந்தர் குழுவின் தலைவராக முன்னாள் கூடுதல் செயலர் ஷீலா பிரியா நியமிக்கப்பட்டார். 2 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.  இதையடுத்து, கடந்த மாதம் துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, செப்டம்பர் 9ம் தேதி வரை அவகாசம் தரப்பபட்டது. இதன்படி, மொத்தம் 147 பேர் விண்ணப்பித்துள்ளனர்

No comments:

Post a Comment