ஊழல் வழக்குகளில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 16 அரசு அதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்த முதலமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

ஊழல் வழக்குகளில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 16 அரசு அதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்த முதலமைச்சர்

ஊழல் வழக்குகளில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 16 அரசு அதிகாரிகளை ஒரே நாளில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதையடுத்து ஒரு நாளில் மட்டும் 16 அரசு அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

4 பொறியாளர்கள், 5 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள், 1 மருந்தாளர், அமீன், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் இரண்டு எழுத்தர்கள் உட்பட 16 ஊழியர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் தான் அரசு ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்று 37 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், 6 அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப்பணிகளில் பணியாற்றி வருபவர்கள் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இது போன்ற தண்டனை முன்னுதாரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment