அரசுப் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 25 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தற்போது 25 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த வகுப்புகள் தவிர கீழ் வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பாடங்கள் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு முதல் பருவத் தேர்வுகள் தொடங்க உள்ளன.
உயர் வகுப்புகளான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு காலாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் முடிந்ததால் 12ம் தேதி முதல் இந்த வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது
இதன்படி நேற்று தேர்வுகள் தொடங்கின. பத்தாம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் 23ம் தேதி வரையும், பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு 23ம் தேதி வரையும் நடக்கின்றன. இந்த தேர்வில் 10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் தலா 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீதம் எழுதுகின்றனர். இந்ததேர்வுகளை பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். பிளஸ் 1 தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலையில் 4.45 மணிக்கு முடியும்.

No comments:
Post a Comment