தொலைநிலை படிப்புகளுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 12, 2019

தொலைநிலை படிப்புகளுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கால அவகாசத்தை நீட்டித்ததைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வருகிற 30-ஆம் தேதி வரை சென்னைப் பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது

.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2019 ஆண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற வலைதளம் மூலமாக ஆன்-லைனில் சேர்க்கை பெற முடியும். மேலும் விவரங்களை www.ideunom.ac.in இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment