8ம் வகுப்பு தனித் தேர்வு தேதிகள் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, September 12, 2019

8ம் வகுப்பு தனித் தேர்வு தேதிகள் அறிவிப்பு

பள்ளியில் படிக்காமல், நேரடியாக, 8ம் வகுப்பு எழுதுவோருக்கு, ஏப்., 2ல், தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனித் தேர்வர்களுக்கு நடத்தப்படும் தேர்வும், புதிய பாடத்திட்டப்படியே நடத்தப்படும்.


ஏற்கனவே, பழைய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்புக்கு தேர்வு எழுதி, அதில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அந்த பாடங்களை மட்டும், புதிய பாடத் திட்டத்தில் எழுதலாம். இந்த கல்வி ஆண்டுக்கான, எட்டாம் வகுப்பு தனித் தேர்வு, ஏப்., 2ல் துவங்குகிறது.


காலை, 10:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். ஏப்., 2ல், தமிழ்; 3ல் ஆங்கிலம்; 7ல் கணிதம்; 8ல் அறிவியல் மற்றும் ஏப்., 9ல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment