ஒரு நாள் முதல்வராக 8ஆம் வகுப்பு மாணவி! அசத்தும் மதுரை மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 14, 2019

ஒரு நாள் முதல்வராக 8ஆம் வகுப்பு மாணவி! அசத்தும் மதுரை மாணவி

மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் 24 மாணவர்களில் முதன்மை வாய்ந்தவர்களின் தகுதிக்கேற்ப மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஆசிரியர்களின் ஒருமித்த கருத்தோடு அதிக வாக்கெடுப்பில் ஸ்ருதிகா என்ற 8ஆம் வகுப்பு மாணவி, வெற்றி பெற்றார்

இதைத் தொடர்ந்து, பள்ளியில் ஒருநாள் முதல்வராக அந்த மாணவியின் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது.

அவருக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் பி. கிருஷ்ணவேணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின், ஒரு நாள் முதல்வரான மாணவி ஸ்ருதிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்களுக்கு உயர்ந்த எண்ணம் இருந்தால் கண்டிப்பாக கல்வி கைகூடும்.

கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே ஒழுக்கம், கலை, கல்வி, அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கவும் மாணவர்கள் செல்ஃபோன் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

அதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் ஆனந்தவள்ளி பேசுகையில், எங்கள் பள்ளியில் ஒரு நாள் முதல்வர் திட்டம் அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு வருடமும் செயல்படுத்திவருகிறோம். இந்த வருடம் ஸ்ருதிகா என்ற 8ஆம் வகுப்பு மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றார்

No comments:

Post a Comment