ரயில் நிலையங்களில் இதைச் செய்தால் உங்கள் செல்போனுக்கு ரீசார்ஜ், டாப்-அப்: ரயில்வே புதிய திட்டம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 14, 2019

ரயில் நிலையங்களில் இதைச் செய்தால் உங்கள் செல்போனுக்கு ரீசார்ஜ், டாப்-அப்: ரயில்வே புதிய திட்டம் அறிவிப்பு

ரயில் நிலையங்களில் அமைக்கப் படவுள்ள பாட்டில்களை நொறுக் கும் இயந்திரங்களை பயன்படுத்தி னால் பயணிகளின் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு, ஏற்றார் போல், மாற்று பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து ரயில்வே துறையும் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த புதிய உத்தரவு வரும் அக்டோபர் 2 முதல் அமலாகிறது. அனைத்து ரயில்களிலும் தூக்கி எறியப்படும் காலி தண்ணீர் பாட்டில்களை பேண்ட்ரி ஊழியர்கள் சேகரித்து, பாதுகாப்பான முறையில் அப் புறப்படுத்த ஐஆர்சிடிசியை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் 1,853 இடங்களில் பாட்டில்களை நொறுக்கும் இயந் திரங்கள் நிறுவப்பட உள்ளன

இதுகுறித்து ரயில்வே அதி காரிகள் கூறுகையில், ''ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்களை நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயன்படுத்த அக்டோபர் 2 முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும், ரயில் நிலையங்களில் பாட்டில்களை நொறுக்கும் இயந் திரங்களும் நிறுவப்பட உள்ளன. முதல்கட்டமாக 400 முக்கியமான ரயில் நிலையங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும். இதுவரையில், 128 ரயில் நிலை யங்களில் மொத்தம் 160 இயந்தி ரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மற்ற ரயில் நிலையங்களிலும் படிப்படியாக நிறுவப்படும்.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஜோலார் பேட்டை, திருச்சி, கோவை உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் இந்த இயந்திரங்களை நிறுவுவதற் கான பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 3 இடங்களில் இந்த இயந்திரங்களை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

பொதுமக்களையும், ரயில் பயணிகளையும் ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே வாரியம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் நிலையங்களில் அமைக்கப்படவுள்ள 'பாட்டில்கள் நொறுக்கும் இயந்திரங்களை' பயன்படுத்தினால் பயணிகளின் செல்போனுக்கு ரீசார்ஜ், டாப்-அப் செய்யப் படும்.

பாட்டில்களை இந்த இயந்தி ரங்களில் போட்டபிறகு, அவர் களது செல்போன் எண்ணை பதி விட வேண்டும். அதன்பிறகு, அவர் களது செல்போனுக்கு ரீசார்ஜ் செய் யப்படும். எவ்வளவு தொகைக்கு ரீசார்ஜ் என்பது விரைவில் வெளியிடப்படும்'' என்றனர்

No comments:

Post a Comment