வாகன ஓட்டுநர்கள் இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, September 10, 2019

வாகன ஓட்டுநர்கள் இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

Join our Whatsapp group1
Join Our Whatsapp group 2
Join Our Whatsapp group3

மின்னல் கல்விச்செய்தி WhatsApp குரூப்பில் இணைய வேண்டுமென்றால் மேலே உள்ள link ஐ பயன் படுத்தி join ஆகவும்

சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அனைவரும் தெரிந்துகொண்டு ஓட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஓட்டும் முறையை, ஒழுங்குப்படுத்தும் விதிமுறைகளை இயற்றியுள்ளது.

இதை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் பாதுகாப்பாக, விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டலாம். இந்தச் சாலை விதிகளை அனைத்து ரக வாகன ஓட்டுநரும் படித்துத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஓட்டுநர், தன்னுடைய வாகனத்தைச் சாலையின் இடதுபுறத்தில் எவ்வளவு நெருக்கமாகச் செலுத்த முடியுமோ அவ்வாறு செலுத்துவதுடன், தனக்கு எதிர்ப்புறமாக வரும் வாகனத்துக்கு, வலதுபுறமாக கடந்து செல்ல போதிய இடம் விட வேண்டும்.

வாகன ஓட்டுநர் இடதுபுறம் திரும்பும்போது சென்று கொண்டிருக்கும் சாலைக்கும், பிரவேசிக்கும் சாலைக்கும் முடிந்த வரையில் இடதுபுறமாகவே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்வலதுபுறம் திரும்பும்போது, சென்று கொண்டிருக்கும் சாலையின் நடுப்பகுதிக்குச் செல்வதுடன் வாகனத்தை கூடிய வரையில் சாலையின் மையக்கோடுகளுக்கு அப்பாலும், சென்டர் மீடியன் உள்ள சாலையில் அதை ஒட்டிச் சென்று வலதுபுறம் திருப்ப வேண்டும்.

வாகன ஓட்டுநர் தான் செல்லும் அதே திசையில் செல்லும் எல்லா வாகனங்களையும், வலப்புறமாக மட்டுமே முந்திச் செல்ல வேண்டும்.

முன் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர், வலது பக்கம் திரும்ப சிக்னல் (இண்டிகேட்டர்) காட்டி, சாலையின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டால், அப்போது மட்டுமே பின்னால் வரும் வாகனத்தின் ஓட்டுநர் முன் செல்லும் வாகனத்தை இடதுபுறம் கடக்கலாம்.

தன்னைப்போல அதே திசையில் பயணம் செய்யும் வாகனத்திற்கு, இடையூறு ஏற்படும்படியும், பார்வை மறைக்கக்கூடிய தடை இருக்கும்போதும் கடந்து செல்லக்கூடாது.

மற்றொரு வாகனம் முந்திச் செல்லும்போது தன் வாகனத்தின் வேகத்தை அதிகரித்தல் அல்லது மற்றவர் தன்னைக் கடந்து செல்வதைத் தடுக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது.

சாலைக் குறுக்கீட்டையோ, சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். மேலும், அந்த இடங்களில் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேராத முறையில் செல்ல முடியும் என்று அறிந்துகொண்ட பின்பே கடக்க வேண்டும்.

சாலைச் சந்திப்பில் ஓர் ஓட்டுநர் பிரவேசிக்கும்போது, அந்தச் சாலையில் ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பிரவேசிக்கும் சாலையில் வலதுபுறம் வரும் எல்லா போக்குவரத்துக்கும் முதலில் வழிவிட வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டுநரும் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும்போது, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஒதுங்கி தடையின்றி செல்வதற்கு கண்டிப்பாக வழிவிட வேண்டும்.

No comments:

Post a Comment