பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.10.19
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்:
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.
பழமொழி
One step forward and two steps backward.
சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித இனத்தை அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
ஒரு மனிதனின் வெளித்தோற்றம் மட்டும் நல்லவன் , தீயவன் என தீர்மானிப்பதில்லை...
உள்ளத்தின் பண்பே தீர்மானிக்கிறது..
--கிருபானந்த வாரியார்
பொது அறிவு
1. எந்த பறவை இனத்தில் ஆண் பறவை மட்டும் அடைகாக்கும்?
நெருப்புக்கோழி.
2. உப்பு நீரை விரும்பிப் பருகும் விலங்கு எது ?
ஒட்டகம்.
English words & meanings
Locust - .
a large grasshopper with strong powers of flight.
வெட்டுக்கிளி இவைகள் பெரிய விளை நிலங்களை கூட அழிக்கும் வல்லமை உள்ளவை.
Loaf - bread that is shaped and baked in one piece and cut before eating
ரொட்டித் துண்டு.
ஆரோக்ய வாழ்வு
எலுமிச்சை சாறில் 5 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இது நோய் தொற்றுகளை சரி செய்கிறது.
Some important abbreviations for students
dr. - doctor.
dept. - department
நீதிக்கதை
ஆசைக்கும் எல்லை உண்டு!
ஒரு காட்டு அதிகாரி இருந்தார். அவருக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டிற்கு சென்றாள்.
அப்போது அவளை பார்த்த ஒரு சிங்கத்திற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதனால் காட்டு அதிகாரியிடம் சென்று, தனக்கு உங்கள் மகளைக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று கேட்டது.
அதிகாரி சிங்கத்தைப் பார்த்து பயந்தார். அதனால்,என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, காட்டு ராஜா, காட்டு ராஜா என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவள் பயப்படமாட்டால் அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்! என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட பிரியத்தால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டு அதிகாரி, முதலில் அதன் பற்களைப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் இருந்தது! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, சிங்கத்தை பலமாக அடித்து விரட்டினார். நடக்காத ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
நீதி :
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
அபூர்வம் -அருமை
அவகாசம் - ஓய்வு
அவசியம்- தேவை
அவயவம்- உறுப்பு
ஆகாயம் -வானம்
இன்றைய செய்திகள்
21.10.19
* மாணவர்கள் ஏட்டு கல்வியுடன் வாழ்க்கை கல்வியும் கற்க வேண்டும் - முதல்வர் கருத்து.
* தமிழகத்துக்கு `ஆரஞ்ச் அலர்ட்’ - மூன்று தினங்களுக்கு மிதமான மழை நீடிக்கும்!
* திருப்பூரில் பலத்த மழை காரணமாக நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது.
*தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.
*ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
Today's Headlines
🌸 Students should be educated in life education along with book education - CM
`
🌸Orange Alert for Tamil Nadu - there will be Moderate rain for three days!
🌸Due to heavy rains in Tirupur, flood in Noyyal River , ground bridge sank again.
🌸Due to Deepavali season Goats in Salem Veeraganur and Thoothukudi Ettayapuram have been sold upto Rs 10 crore
🌸In 3rd test against South Africa in Ranchi India declare for 497 runs in first innings.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment