அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30 வரை விடுமுறை கிடையாது! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 16, 2019

அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30 வரை விடுமுறை கிடையாது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், 'உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படமாட்டாது.

 வரும் நவம்பர் 30ம் தேதி வரை விடுப்புக்கு யாரேனும் விண்ணப்பித்திருந்தால் அதனை உயர் அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். அவசர காலத் தேவைக்காக மட்டும் வேண்டுமானால் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.


மேலும், அரசு அதிகாரிகள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டும், அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதை அடுத்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment