காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 8, 2019

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழகப் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பா் 23-இல் முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து ஒன்பது நாள்கள் விடுமுறை விடப்பட்டு கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னா் மீண்டும் 5-ஆம் தேதி முதல் ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் புதன்கிழமை மீண்டும் பள்ளிகள் திறந்ததும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.தேர்வில் பின்தங்கிய மாணவா்களுக்கு எந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததோ, அந்தப் பாடத்தில் காலை, மாலை நேர சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். அவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியா்கள் கூடுதல் நேரம் பணியாற்றி, மாணவா்களின் தேர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment