ஜியோவின் புதிய அறிவிப்பால் குழம்பிய வாடிக்கையாளர்கள்... புதிய டாக்-டைம் திட்டங்கள் இது தான்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 11, 2019

ஜியோவின் புதிய அறிவிப்பால் குழம்பிய வாடிக்கையாளர்கள்... புதிய டாக்-டைம் திட்டங்கள் இது தான்!

ஜியோ நிறுவனம் சமீபத்தில் எதிர்பார்த்திடாத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதன்படி இதுவரை பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற அழைப்பு மற்றும் அதிகளவிலான டேட்டா திட்டங்களுக்குப் பிறகு, தற்பொழுது பிற நெட்வொர்க்குகளில் உள்ள எண்களுக்கான அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.இந்த எதிர்பாராத அறிவிப்பு ஜியோ பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


ஜியோ பயனர்கள், ஜியோ எண்ணிற்கு மற்றும் பிற நெட்வொர்க் எண்ணிற்கும் அழைப்பு சேவையைப் பயன்படுத்தும் பொழுது ஜியோ நிறுவனம் முன்பிருந்தே எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை. இதைத் தான் ஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது

ஆனால் தற்பொழுது பிற நெட்வொர்க் எண்களுக்கு, ஜியோ பயனர்கள் அழைப்பு சேவையைப் பயன்படுத்தினால் நிமிடத்திற்கு 0.06 பைசா வசூலிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டணத்தை முற்றிலும் இலவசமாக வழங்காமல் சலுகையுடன், சில புதிய டாப் அப் திட்டங்களைக் கொண்டு சமாளிக்கும் விதத்தில் ஜியோ தற்பொழுது அறிவித்துள்ளது.


ரூ.10 திட்டம் உங்களுக்கு 124 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 1 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.20 திட்டம் உங்களுக்கு 249 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 2 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.50 திட்டம் உங்களுக்கு 656 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 5 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது

.

ரூ.100 திட்டம் உங்களுக்கு 1,362 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 10 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறதுஇந்த புதிய டாப் அப் திட்டங்களை பயன்படுத்தி, ஜியோ பயனர்கள் பிற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு சேவையைக் குறைந்த கட்டணத்தில் இலவச டேட்டாவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment