எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வு : அமைச்சர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 4, 2019

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வு : அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் தேர்வு எழுதவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.


மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மற்றும் ஜவர்கலால் நேரு மருத்துவ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (ஜிப்மர்) சேருவதற்கு தற்போது அந்தந்த நிறுவனங்களே தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி வருகின்றன.


இந்த நிலையில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள தேசிய நுழைவுத்தேர்வு நீட் இந்த இரு நிறுவனங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று அறிவித்தார்.

அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் அடுத்த கல்வி ஆண்டுமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு ஒரே பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் நீட் எழுதவேண்டும். நாடு முழுவதும் மருத்துவ கல்வி நிலையான தரத்தை பெறும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment