தீபாவளி விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

தீபாவளி விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பு:


தீபாவளிக்கு மறுநாள் (அக். 28) பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம் சார் அறிவியல் படிப்பு (Allied Health Science) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறவிருந்தன

.

இந்த நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment