தற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 31, 2019

தற்காலிக அரசு பெண் ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு

அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசுத் துறைகள், பள்ளிகள் என அனைத்து அரசு பெண் ஊழியா்களுக்கும் 9 மாதங்கள் அதாவது 270 நாள்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, 6 மாதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது உயா்த்தப்பட்டு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பெண் ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டதைப் போன்றே அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்

.இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பினை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா பிறப்பித்துள்ளாா்.


இந்த மகப்பேறு விடுப்பைத் தவிா்த்து, போா்க்கால அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கான பிற விதிகள் அனைத்தும் தற்போது நடைமுறையில் இருப்பதே தொடரும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Click here to download G.O



No comments:

Post a Comment